/உள்ளூர் செய்திகள்/மதுரை/கணித வினாத்தாளை முதுகலை ஆசிரியர்களே தயாரிக்க வேண்டும்கணித வினாத்தாளை முதுகலை ஆசிரியர்களே தயாரிக்க வேண்டும்
கணித வினாத்தாளை முதுகலை ஆசிரியர்களே தயாரிக்க வேண்டும்
கணித வினாத்தாளை முதுகலை ஆசிரியர்களே தயாரிக்க வேண்டும்
கணித வினாத்தாளை முதுகலை ஆசிரியர்களே தயாரிக்க வேண்டும்
ADDED : ஜூலை 17, 2011 01:52 AM
மதுரை : மதுரையில் தமிழ்நாடு கணிதபாட முதுகலை ஆசிரியர்கள் கழகக் கூட்டம் மாநில தலைவர் தமிழ்க்குமரன் தலைமையில் நடந்தது.
இணைச் செயலாளர் வரதராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். செயலாளர் என்.ஆர்.ராஜா, பொருளாளர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.பிளஸ்2 உடனடி மறுதேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியை விரைந்து முடித்த முதன்மை கல்வி அலுவலரை பாராட்டுவது, கணித பாடத்திற்கு இந்த ஆண்டே செய்முறை தேர்வை கொண்டு வரவேண்டும், கல்லூரி ஆசிரியர்களைக் கொண்டு தயாரிக்கும் பிளஸ்2 கணித தேர்வு வினாத்தாளை, முதுகலை கணித ஆசிரியர்களைக் கொண்டே தயாரிக்க வேண்டும், என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.