Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நில அபகரிப்பு தடுப்பு பிரிவு: 25 புகார்கள் குறித்து விசாரணை

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு: 25 புகார்கள் குறித்து விசாரணை

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு: 25 புகார்கள் குறித்து விசாரணை

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு: 25 புகார்கள் குறித்து விசாரணை

ADDED : ஆக 25, 2011 01:52 AM


Google News
ஊட்டி : நீலகிரியில் நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு அதிகாரபூர்வமாக நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது; தற்போது 25 புகார்கள் மீதான விசாரணை துரிதமாக நடந்து வருகிறது.நில மோசடி மற்றும் அபகரிப்பு தடுப்பதற்காக மாவட்டம் தோறும் நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கான நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு அதிகாரபூர்வமாக நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு டி.எஸ்.பி.,யாக வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் பொறுப்பில் விஜயனும், எஸ்.ஐ.,க்களாக நஞ்சன், உண்ணிகிருஷ்ணன், முஸ்தபா மற்றும் பரதனும் தலைமை காவலராக கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி ஜி1 காவல்நிலையத்தில் இப்பிரிவு நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. நீலகிரியில் நில அபகரிப்பு மற்றும் மோசடி தொடர்பாக இது வரை 84 புகார்கள் வந்துள்ளன. இதில் 59 புகார்கள் மீதான விசாரணை முடிந்துள்ளது, மீதமுள்ள 25 புகார்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us