ADDED : ஜூலை 13, 2011 11:57 PM
ஓசூர்: தளி அடுத்த மஞ்சுகிரி கிராமத்தை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர்
முத்துராஜ் (33).
கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டில் உள்ள ஆடுகளை
மேய்க்க சென்ற முத்துராஜை காணவில்லை. உறவினர்கள் தேடியபோது அதே
பகுதியையொட்டிய வனப்பகுதியில் முத்துராஜ் மர்மமான முறையில் பிணமாக
கிடந்தார்.அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் எப்படி இறந்தார் என
தெரியவில்லை. போலீஸார் பிணத்தை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரது உடலை பிரேதபரிசோதனை
செய்து அவர் எப்படி இறப்பை அறிய முக்கிய உடல் உறுப்புகளை சென்னையில்
அறியவில் ஆய்வகத்திற்கு போலீஸார் அனுப்பி உள்ளனர். வனப்பகுதியில் அவர்
இறந்து கிடந்ததால் யானைகள் அவரை மிதித்து கொன்று இருக்கலாம் என போலீஸார்
சந்தேகம் அடைந்துள்ளனர்.


