Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மனைவியை கொடுமை செய்த வாலிபர் உள்ளிட்ட 6 பேர் கைது

மனைவியை கொடுமை செய்த வாலிபர் உள்ளிட்ட 6 பேர் கைது

மனைவியை கொடுமை செய்த வாலிபர் உள்ளிட்ட 6 பேர் கைது

மனைவியை கொடுமை செய்த வாலிபர் உள்ளிட்ட 6 பேர் கைது

ADDED : ஆக 05, 2011 12:43 AM


Google News
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூர் அரியானூரை சேர்ந்தவர் விவசாயி சிகாமணி (26). இவர் அதே பகுதியை சேர்ந்த சத்தியவாணி (23) என்பவரை இரு ஆண்டாக காதலித்து வந்தார். கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக வரதட்சணை கேட்டு சிகாமணி மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தியவாணியை கொடுமைபடுத்தினர். சத்தியவாணி பர்கூர் மகளிர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து, சிகாமணி, மாமனார் வேலு, மாமியார் நாகம்மாள், சிகாமணியின் சகோதரர் அண்ணாமலை, அத்தை செல்லியம்மாள், அவரது மகன் கார்த்திகேயன் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us