Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/"முதல்வர் ஜெ., கொடுக்கும் தாய் வீட்டுச்சீதனம்' தாலிக்கு தங்கம் திட்டத்தை மெச்சிய அமைச்சர்

"முதல்வர் ஜெ., கொடுக்கும் தாய் வீட்டுச்சீதனம்' தாலிக்கு தங்கம் திட்டத்தை மெச்சிய அமைச்சர்

"முதல்வர் ஜெ., கொடுக்கும் தாய் வீட்டுச்சீதனம்' தாலிக்கு தங்கம் திட்டத்தை மெச்சிய அமைச்சர்

"முதல்வர் ஜெ., கொடுக்கும் தாய் வீட்டுச்சீதனம்' தாலிக்கு தங்கம் திட்டத்தை மெச்சிய அமைச்சர்

ADDED : செப் 19, 2011 12:36 AM


Google News
தஞ்சாவூர்: ''தாராள மனத்துடன் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதா, தாய்வீட்டுச் சீதனமாக பெண்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறார்,'' என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறையின் சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித்திட்டத்தின் கீழ், முதல்வரின் சிறப்புத்திட்டத்தின்படி, தாலிக்கு நான்கு கிராம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் விழா, கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 படித்த 372 பேருக்கு, தலா நான்கு கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 94 லட்ச ரூபாயும், பட்டதாரிகள் மற்றும் பட்டயப்படிப்பு படித்த 199 பயனாளிகளுக்கு தலா நான்கு கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகையினை வழங்கி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது: தமிழக முதல்வராக பொறுப்பேற்று 120 நாட்களில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத நலத்திட்டங்களை ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் துறையூர், வல்லம், சீராளூர், அள்ளூர், நடுப்படுகளை, அலவந்திபுரம், குருவிக்கரம்பை, நாயகத்திவயல், வில்லுனிவயல், கொடிவயல், ஆவணம் ஆகிய 11 இடங்களில் விவசாயத் தொழிலாளர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள், மாணவர்கள், ஏழை பெண்கள் நலனுக்காக, கறவை மாடுகள், வெள்ளாடுகள், மின்விசிறிகள், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, 'லேப்-டாப்' போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவி வழங்குவதில் முத்தாய்வு வைத்ததைபோல, தாராள மனத்துடன் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதா, தாய்வீட்டுச்சீதனமாக பெண்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கி, தாயாக இருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். மாணவருக்கு உதவித்தொகை: தஞ்சை அண்ணாநகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், 219 மாணவ, மாணவிகளுக்கு, சிறப்பு ஊக்கத் தொகைக்கான வைப்புப் பத்திரங்களை அமைச்சர் வழங்கினார். மாணவர்களுக்கு லேப்-டாப்: தஞ்சை ஒன்றியம் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், 67 மாணவர்களுக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்களை வழங்கினார். விழாவில், கலெக்டர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us