/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சுதந்திரதின விழாவில் மரக்கன்று வழங்கல்சுதந்திரதின விழாவில் மரக்கன்று வழங்கல்
சுதந்திரதின விழாவில் மரக்கன்று வழங்கல்
சுதந்திரதின விழாவில் மரக்கன்று வழங்கல்
சுதந்திரதின விழாவில் மரக்கன்று வழங்கல்
ADDED : ஆக 17, 2011 01:43 AM
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நேஷனல் வித்யாலயா நர்சரி பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் எம்.எல்.ஏ., அன்பழகன் தேசியக்கொடி ஏற்றினார்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் மேகலா நகரில் நேஷனல் வித்யாலயா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் காலை 65வது சுதந்திரதின விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். ஆசிரியை அனிதா வரவேற்றார். விழாவில் கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி தாளாளர் அண்ணாதுரை விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் பேச்சுப்போட்டி, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு ரோட்டரி சமுதாயக்குழுமத்தினர் மரக்கன்று வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் சின்னராணி, சுவீதா, சரண்யா, சர்மிளா, அனுசுயா ஆகியோர் விழா செய்திருந்தனர்.