UPDATED : ஆக 20, 2011 11:37 PM
ADDED : ஆக 20, 2011 03:38 PM
ஓவல்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாளான இன்று தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடும் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடை பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி 591 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்துள்ளது. ஸ்டிராஸ் 40 ரன்களுக்கும், குக் 34 ரன்களுக்கும், இயான் பெல் 235 ரன்களுக்கும், கெவின் பீட்டர்சன் 175 ரன்களுக்கும், ஆண்டர்சன் 13 ரன்களுக்கும், மோர்கன் ஒரு ரன்னுக்கும் அவுட்டானார்கள். இந்திய தரப்பில் ஸ்ரீசந்த் 3 விக்கெட்களையும், ரெய்னா 2 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.