/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காந்தி அறக்கட்டளை நில அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவருக்கு ஜாமீன்காந்தி அறக்கட்டளை நில அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவருக்கு ஜாமீன்
காந்தி அறக்கட்டளை நில அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவருக்கு ஜாமீன்
காந்தி அறக்கட்டளை நில அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவருக்கு ஜாமீன்
காந்தி அறக்கட்டளை நில அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவருக்கு ஜாமீன்
ADDED : செப் 13, 2011 02:01 AM
ப.வேலூர்: ப.வேலூரில் உள்ள மகாத்மா காந்தி ஞபாகார்த்த அறக்கட்டளைக்கு
சொந்தமான கட்டிடம், நிலத்தை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ம.க.,
முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து, புஞ்சை இடையார் மேல்முகம் கிராமத்தில், மகாத்மா
காந்தி ஞாபகார்த்த அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடம், நிலம் உள்ளது. 10
கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடம், நிலத்தை, ப.வேலூர் தொகுதி முன்னாள்
பா.ம.க., எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன், போலி ஆவணம் தயார் செய்து அபகரித்ததாக
குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பாக, பொத்தனூரைச் சேர்ந்த மதியழகன்
என்பவர், நாமக்கல் நில அபகரிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
அதன்பேரில், கடந்த 9ம் தேதி முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் (54),
அதறகு உடந்தையாக செயல்பட்ட ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன்
பொன்னிமணி (51), வக்கீல் காமராஜன் (53) ஆகிய மூவரையும் போலீஸார் கைது
செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மூவரும், ப.வேலூர் குற்றவியல்
நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை
விசாரணை செய்த மாஜிஸ்திரேட் நந்தினிதேவி, மூவருக்கும் நிபந்தனை ஜாமீன்
வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, நாள்தோறும் ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷனில் காலை
10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். முன்னாள் சேர்மன் பொன்னிமனியின்
மகன் திருமணம் உள்ளதால், அவர் 16ம் தேதி முதல் ஸ்டேஷனில் கையெழுத்திட
வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் எவ்வித எதிர்ப்பும்
தெரிவிக்காதது, முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூவருக்கும்
எளிதில் ஜாமீன் கிடைத்ததற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.