/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரூர் பஞ்., யூனியனில் உள்ளாட்சி பதவி விபரம்அரூர் பஞ்., யூனியனில் உள்ளாட்சி பதவி விபரம்
அரூர் பஞ்., யூனியனில் உள்ளாட்சி பதவி விபரம்
அரூர் பஞ்., யூனியனில் உள்ளாட்சி பதவி விபரம்
அரூர் பஞ்., யூனியனில் உள்ளாட்சி பதவி விபரம்
ADDED : செப் 26, 2011 11:51 PM
அரூர்: அரூர் யூனியனில் மொத்தம் 34 பஞ்சாயத்து தலைவர், 23 ஒன்றிய கவுன்சிலர் பதவி, மாவட்ட கவுன்சிலர் 2,321 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன.
நேற்று அமாவாசை என்பதால் ஏராளமானோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனுத்தாக்கல் செய்தனர். இதனால் அரூர் ரவுண்டானவிலிருந்து சார்பு நீதிமன்றம் வளாகம் வரை மக்கள் கூட்டம் இருந்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் இருந்தது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடன் அழைத்து வந்த ஆதரவாளர்களுக்கு பிரியாணி மற்றும் மதுவிருந்து அளித்தனர். அ.தி.மு.க.,வில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாததால் யாரும் மனுத்தாக்கம் செய்யவில்லை. அரூர் யூனியன் அலுவலகத்தில் தேர்தல் பற்றிய விபரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரியாக தெரியப்படுத்தாதல் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சைகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
தேர்தல் பற்றிய விபரத்தை அறிய சென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர் மற்றொரு அலுவலர் செல்லுமாறு கூறுகிறார். அவரிடம் சென்றால் அவர் மற்றொரு அலுவலரிடம் செல்லுமாறு கூறுகிறார். இதனால், சுயேச்சை வேட்பாளர்கள் விபரங்களை அறிய முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அரூர் யூனியனில் 34 பஞ்சாயத்துகள் உள்ளன. ஆனால் அறிவிப்பு பலகையில் 29 பஞ்சாயத்து பற்றிய விபரங்கள் உள்ளன. இதனால் சிட்லிங், ஏ.கே.தண்டா, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி போன்ற மலைப்பகுதியில் மனுத்தாக்கல் செய்த விபரங்களை அறிய முடியாத நிலையுள்ளது.