/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் ரூ. 4,000க்கு கீழிறங்கியது மஞ்சள் விலைஈரோட்டில் ரூ. 4,000க்கு கீழிறங்கியது மஞ்சள் விலை
ஈரோட்டில் ரூ. 4,000க்கு கீழிறங்கியது மஞ்சள் விலை
ஈரோட்டில் ரூ. 4,000க்கு கீழிறங்கியது மஞ்சள் விலை
ஈரோட்டில் ரூ. 4,000க்கு கீழிறங்கியது மஞ்சள் விலை
ஈரோடு: பண்டிகை காலங்களை எதிர்பார்த்து கிடக்கும் மஞ்சள் விவசாயிகளுக்கு, இரண்டு நாள் விடுமுறைக்கு பின், மஞ்சள் விலை 4,000 ரூபாய்க்கு கீழ் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மஞ்சள் சந்தைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று வழக்கம்போல், மஞ்சள் சந்தை நடந்தது. நேற்று குவிண்டாலுக்கு மேலும் 200 ரூபாய் குறைந்ததால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகி உள்ளனர். ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன்தினம் விரலி குவிண்டால் 5,639 ரூபாய்க்கு விற்றது; நேற்று 5,440 ரூபாயாக சரிந்தது. கிழங்கு 4,629க்கு விற்றது; 40 ரூபாய் அதிகரித்து 4,669 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஈரோடு சொசைட்டியில் விரலி 100 ரூபாய் குறைந்து, 4,491 ரூபாய்க்கும், கிழங்கு 210 ரூபாய் குறைந்து, 4,098 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெளிமார்க்கெட்டில் விரலி, 4,506 ரூபாய்க்கும், கிழங்கு 4,234 ரூபாய்க்கும், கோபி சொசைட்டியில் விரலி 4,106 ரூபாய்க்கும், கிழங்கு 3,911 ரூபாய்க்கும், சேலம் சொசைட்டியில் விரலி 5,466 ரூபாய்க்கும், கிழங்கு 4,674 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.