ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க மதுரை வருகிறார் அமித் ஷா
ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க மதுரை வருகிறார் அமித் ஷா
ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க மதுரை வருகிறார் அமித் ஷா

சென்னை: பா.ஜ., தொண்டர்களை சந்தித்து, தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும், 8ம் தேதி மதுரை வருகிறார்.
தமிழகத்தில், 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு, 11 மாதங்களே உள்ளதால், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
கடந்த ஏப்., 11ல் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தனர்.
இந்நிலையில், அமித் ஷா வரும், 8ம் தேதி மதுரை வருகிறார். அவர், தென் மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து, தேர்தல் பணிகள் தொடர்பாக அறிவுரை வழங்க உள்ளார்.
இதற்காக அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு, பிரமாண்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகிறார் அமித் ஷா. இதில் மாநில அளவில் கிளை அமைப்புகளுக்கு மேலான, மாநில அமைப்புகள் வரையான நிர்வாகிகள் 12,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்களோடு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மதுரையில் இம்மாதம், 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'எந்த ஷா வந்தாலும், தமிழகத்தை ஆள முடியாது. டில்லிக்கு தமிழகம் எப்பவுமே, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' தான்' என்றார்.
இதற்கு, பதிலடி கொடுக்கவே அமித் ஷா, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் ஏற்பாட்டை செய்து மதுரைக்கு வருவதாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.
இப்படியொரு கூட்டத்தை, கோவையில் கூட்டி அமித் ஷாவை தமிழகம் அழைத்து வரத்தான் ஏற்பாடாகி இருந்தது.
தி.மு.க., பொதுக்குழு மதுரையில் நடந்து முடிந்தபின், அமித் ஷாவே, நிகழ்ச்சியை மதுரையில் நடத்துமாறு கூறிவிட்டதாக பா.ஜ., வட்டாரங்கள் கூறின.