பெண்களுக்கு 'பெப்பர் ஸ்பிரே' பா.ஜ., ஏற்படுத்தும் விழிப்புணர்வு
பெண்களுக்கு 'பெப்பர் ஸ்பிரே' பா.ஜ., ஏற்படுத்தும் விழிப்புணர்வு
பெண்களுக்கு 'பெப்பர் ஸ்பிரே' பா.ஜ., ஏற்படுத்தும் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 05, 2025 02:54 AM

கோவை: கோவையைச் சேர்ந்த இளம்பெண்களுக்கு இலவசமாக, 'பெப்பர் ஸ்பிரே' வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், பா.ஜ., பெண் நிர்வாகி.
சென்னை அண்ணா பல்கலையில் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவு வழக்கில் தீர்ப்பே வந்துவிட்டாலும், வழக்கின் பிரதான குற்றவாளியான ஞானசேகரனை கடந்து, பலருக்கும் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதற்காக, பாலியல் தொந்தரவு கொடுக்கும்போது, ஞானசேகரன் மொபைல் போன் வாயிலாக யாரோ ஒருவரிடம் பேசினார். அப்போது அவரை 'சார்' என்று குறிப்பிட்டார் என, பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்திருந்தார்.
ஆனாலும், வழக்கு விசாரணையில் அப்படி எந்த சாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், இந்த விவகாரத்தில், 'யார் அந்த சார்?' என கேட்டு, தீர்ப்புக்கு பின்னரும் எதிர்க்கட்சியினர் சலசலப்புகளை உண்டு பண்ணுகின்றனர்.
இந்நிலையில், 'தமிழகத்தில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; அதற்கு தற்காப்பு மிகவும் முக்கியம். ஒவ்வொரு பெண்ணும் பெப்பர் ஸ்பிரேக்களை தற்காப்புக்காக வைத்துக் கொள்ள வேண்டும்' என, கோவை மாவட்ட பா.ஜ., பொறுப்பாளர் கவுசல்யா, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் வசிக்கும் மகளிருக்கு, நேற்று இலவச பெப்பர் ஸ்பிரேக்களை கவுசல்யா வழங்கினார்.
பின், அவர் கூறுகையில், ''தமிழகத்தில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 'யார் அந்த சார் விவகாரம்' இனியும் முடிவுக்கு வரவில்லை. இளம்பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, எப்போதும் பெப்பர் ஸ்பிரே வைத்திருக்க வேண்டும்.
''இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இலவசமாக கொடுத்து வருகிறேன். என்னால் அனைவருக்கும் கொடுக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்,'' என்றார்.