/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முருகன் கோவில் மலைப்பாதையில் விதிமீறிய ஆட்டோக்கள் பறிமுதல் முருகன் கோவில் மலைப்பாதையில் விதிமீறிய ஆட்டோக்கள் பறிமுதல்
முருகன் கோவில் மலைப்பாதையில் விதிமீறிய ஆட்டோக்கள் பறிமுதல்
முருகன் கோவில் மலைப்பாதையில் விதிமீறிய ஆட்டோக்கள் பறிமுதல்
முருகன் கோவில் மலைப்பாதையில் விதிமீறிய ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 05, 2025 02:54 AM

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு ஒருவழிப்பாதை மட்டுமே உள்ளதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகள் மீறி மலைப்பாதையில் இயக்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், நடந்து செல்லும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் ஆட்டோ மற்றும் கார், வேன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முருகன் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தது.
நேற்று காலை திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், முருகன் கோவில் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டார்.
இதில், மலைக்கோவிலுக்கு செல்லும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்ததில், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், பேட்ஜ் மற்றும் ஆர்.சி., புத்தகம் இல்லாமல் இயங்கி வந்த, நான்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்தார்.
மேலும், போக்குவரத்து விதிமுறைகள் மீறிய 10 வாகன உரிமையாளர்களிடம் இருந்து, 50,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, 'உரிய அனுமதி மற்றும் அதிவேகமாக ஆட்டோ ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.