Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி வழங்குவதில் சிக்கல்

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி வழங்குவதில் சிக்கல்

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி வழங்குவதில் சிக்கல்

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி வழங்குவதில் சிக்கல்

ADDED : செப் 06, 2011 11:40 PM


Google News

விருதுநகர் : கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை கோ-ஆப் டெக்ஸ் வழங்காததால், நெசவாளர்களுக்கு கூலி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசின் இலவச வேட்டி, சேலை திட்டம், சீருடை திட்டங்களுக்கு கூட்டுறவு நெசவளார் சங்கங்களே உற்பத்தி செய்து தருகின்றன. இந்த உற்பத்திக்கு தேவையான நூலை கோ-ஆப் டெக்ஸ் கடனாக வழங்குகிறது. மேலும், மத்திய கூட்டுறவு வங்கிகள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்குவதில் தான் நெசவாளர்களுக்கு கூலி வழங்கப்பட்டு வந்தது. உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகளை கோ-ஆப் டெக்ஸ் தரப்பரிசோதனை செய்தே கொள்முதல் செய்யும். அதற்குரிய தொகையை அரசிடம் பெற்று, கோ-ஆப் டெக்ஸ், கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வந்தது. தற்போது, கோ-ஆப் டெக்ஸ் கொள்முதல் செய்த துணி வகைகளுக்கு 5.50 கோடி ரூபாய் பாக்கி வழங்கப்படவில்லை. கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் தகுதிக்கேற்ப மட்டுமே மத்திய கூட்டுறவு வங்கி கடன் வழங்கும். ஏற்கனவே, பெறப்பட்ட கடன் செலுத்தாத நிலையில், மீண்டும் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோ-ஆப் டெக்ஸ் நிறுவனமோ, இது வரை சப்ளை செய்த வேட்டி- சேலைகளுக்கு அரசு பணம் வழங்காததால், பாக்கி தொகை வழங்க முடியவில்லை, என தெரிவிக்கிறது. சப்ளை செய்யப்பட்ட வேட்டி, சேலைகளுக்கு வருவாய்துறையினர் பணம் வழங்க வேண்டும். இவர்களின் காலதாமதம் காரணமாக கைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து கைத்தறி சங்கங்களுக்கு நிலுவைத்தொகை வழங்க முன்வர வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us