/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை பெற இனிமேல் அலைய வேண்டாம்மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை பெற இனிமேல் அலைய வேண்டாம்
மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை பெற இனிமேல் அலைய வேண்டாம்
மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை பெற இனிமேல் அலைய வேண்டாம்
மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை பெற இனிமேல் அலைய வேண்டாம்
ADDED : ஜூலை 27, 2011 02:22 AM
தூத்துக்குடி : மாற்றுதிறனாளிகள் இனிமேல் அடையாள அட்டை பெறுவதற்கு டாக்டர்களிடம் சான்று பெற மாவட்ட தலைநகரங்களுக்கு அலைய வேண்டியதில்லை. ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் சான்று பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான மாற்றுதிறனாளிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரசின் பல்வேறு சலுகைகளை வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. எல்லா மாற்றுதிறனாளிகளுக்கும் அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைப்பதற்கு மாற்றுதிறனாளிகள் துறை சார்பில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுதிறனாளிகளை அலைய வைக்காமல் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.தங்களது வீட்டின் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட டாக்டர்களிடம் மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டைக்கு சான்று பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு வீணாக அலைந்து வந்து சங்கடப்பட வேண்டிய நிலை இனிமேல் இருக்காது.மாற்றுதிறனாளி ஒருவர் முன்பு அடையாள அட்டை பெற வேண்டும் என்றால் மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை ஆஸ்பத்திரியில் நடக்கும் மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் தலைமை ஆஸ்பத்திரிகளில் வாரத்திற்கு ஒரு நாள் நடக்கும் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
இதில் மாவட்ட மருத்துவ பணிகள் குழு இணை இயக்குநர், மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர், ஒவ்வொரு பிரிவில் உள்ள சிறப்பு மருத்துவர்கள், 2 சாதாரண டாக்டர்கள் ஆகியோர் பங்கேற்பர்.அவர்கள் மாற்றுதிறனாளிகளை பரிசோதனை செய்து 3 பேர் அவருக்குரிய ஊனம் குறித்து எத்தனை சதவீத ஊனம் உள்ளிட்ட விபரத்திற்கு சான்று அளிப்பர்.ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர், இரண்டு டாக்டர்கள் கையெழுத்து இட வேண்டும். காது மூக்கு தொண்டை, நரம்பியல் உள்ளிட்ட ஊனமாக இருந்தால் அந்த துறையின் சிறப்பு மருத்துவர் ஒருவர் கையெழுத்திடுவர். இந்த சான்றினை வைத்து மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.அந்த சான்றின் அடிப்படையில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் அவருக்குரிய அடையாள அட்டையை வழங்குவர். இது தான் இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனால் தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி இனிமேல் மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை பெற தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் சான்று பெற்றால் போதுமானது. விபத்தில் ஒருவர் கால் துண்டிக்கப்பட்டிருந்தால் அவருக்குரிய ஊனத்திற்கு மாவட்ட தலைநகரில் உள்ள மருத்துவ குழுவில் ஆஜராகி சான்று பெற வேண்டியதில்லை. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் சான்று பெற்று வந்தால் போதும். அவர்களுக்கு மாவட்ட அதிகாரி அடையாள அட்டை வழங்கி விடுவார்.இதே போல் மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்டோக் வந்து அவரால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்க வேண்டிய நிலை இருந்தால் அவருக்குரிய ஊனத்தின் அளவு சான்றுக்காக மாவட்ட தலைநகர ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியதில்லை. லோக்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் சான்று வாங்கி கொள்ளலாம்.
அதே சமயம் காது கேட்கவில்லை உள்ளிட்ட ஊனத்திற்கு மாவட்ட தலைநகரில் வாரத்திற்கு ஒரு நாள் நடக்கும் முகாமில் கலந்து கொண்டு சான்று பெற வேண்டும். ஏன் என்றால் காது கேட்காது என்று தவறாக சொல்லி போலி சான்று எதுவும் பெற்று விடக் கூடாது என்பதற்காக அரசு இதுபோன்றவற்றிற்கு சலுகை காட்டாமல் முன்பிருந்த நடைமுறையை அப்படியே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.பல ஊனம் உள்ள மாற்றுதிறனாளிகள் என்பது ரேர் கேஸ் ஆகும். மற்ற ஊனங்கள் தான் மிக அதிகம் என்பதால் அரசின் புதிய உத்தரவு மூலம் மாற்றுதிறனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள டாக்டர்களிடம் சான்று பெறும் வாய்ப்பு இருப்பதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சான்று பெற்றவுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிக்கு விண்ணப்பித்தால் உடனடியாக அடையாள அட்டை கிடைத்துவிடும்.
அடையாள அட்டையை பெற்று விட்டால் அந்த மாற்றுதிறனாளிக்கு அது மிகப் பெரிய ஆவணத்துடன் கூடிய பொக்கிஷமாகும். அø டயாள அட்டை உள்ளோருக்கு தான் அரசின் எல்லா சலுகைகளும் கிடைக்கும் என்பது குறுப்பிடத்தக்கதாகும்.