/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குண்டாறு அணையில் குளித்த வாலிபர் பலிகுண்டாறு அணையில் குளித்த வாலிபர் பலி
குண்டாறு அணையில் குளித்த வாலிபர் பலி
குண்டாறு அணையில் குளித்த வாலிபர் பலி
குண்டாறு அணையில் குளித்த வாலிபர் பலி
ADDED : செப் 13, 2011 11:52 PM
தென்காசி : செங்கோட்டை குண்டாறு அணையில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
செங்கோட்டை அருகே வல்லம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சப்பிரமணியன். இவரது மகன் சுரேஷ் (22). கூலி தொழிலாளி. இவரும் இவரது நண்பர்கள் சிலரும் நேற்று முன்தினம் மாலையில் செங்கோட்டை குண்டாறு அணைக்கு குளிக்க சென்றனர். அவர்கள் அனைவரும் அணையில் 'டைவ்' அடித்து குளித்துள்ளனர். சுரேஷ் 'டைவ்' அடித்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் இருந்த சேறு பகுதிக்குள் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். அவரை அவரது நண்பர்கள் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுபற்றி செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலையிலும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரேஷ் உடல் தண்ணீரில் மிதந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து செங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.