/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொத்தனேரி மீன்பிடி குத்தகை தொகை திடீர் குறைப்பு: பஞ்., நிர்வாகம் குழப்பம்கொத்தனேரி மீன்பிடி குத்தகை தொகை திடீர் குறைப்பு: பஞ்., நிர்வாகம் குழப்பம்
கொத்தனேரி மீன்பிடி குத்தகை தொகை திடீர் குறைப்பு: பஞ்., நிர்வாகம் குழப்பம்
கொத்தனேரி மீன்பிடி குத்தகை தொகை திடீர் குறைப்பு: பஞ்., நிர்வாகம் குழப்பம்
கொத்தனேரி மீன்பிடி குத்தகை தொகை திடீர் குறைப்பு: பஞ்., நிர்வாகம் குழப்பம்
ADDED : ஆக 16, 2011 04:09 AM
மேட்டூர் :மேட்டூர் தாலுகா, கொளத்தூர் ஒன்றியம், லக்கம்பட்டி பஞ்., நீதிபுரம் கிராமத்தில் உள்ள கொத்தனேரி, 20 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது.
இதன் மூலம், 436 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொத்தனேரியில் மீன்குஞ்சுகள் விட்டு வளர்க்கப்படுகிறது.பொதுப்பணித்துறை சார்பில், மீன் பிடிப்பதற்கு குத்தகை விடப்பட்டது.ஏலம் எடுப்பவர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஏரியில் மீன் பிடிக்கலாம். மீன் பிடிப்பதற்கான ஏலம் பஞ்சாயத்து சார்பில் விடப்பட்டு, குத்தகை தொகை பஞ்.,நிதியில் சேர்க்க வேண்டும் என, லக்கம்பட்டி பஞ்., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதை தொடர்ந்து, பஞ்., சார்பில் முதன்முறையாக கடந்த ஃபிப்ரவரி மாதம் ஏலம் நடத்தப்பட்டது. ஏலம் குறித்து முறையாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என, பஞ்சாயத்தில் எதிர்ப்பு கிளம்பியது.சட்டசபை தேர்தல் வந்ததால் மறு ஏலம் ஆகஸ்ட் 4க்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி நடந்த ஏலத்தில், 30 பேர் பங்கேற்றனர். ஒவ்வொருவரும், 10 ஆயிரம் ரூபாய் டெபாஸிட் செலுத்தி போட்டி போட்டு ஏலம் கேட்டனர். அவர்களில் ஒருவர் அதிகபட்சமாக, 3.62 லட்சத்துக்கு ஏலம் கேட்டார்.ஏலம் எடுத்தவர் குத்தகை தொகை செலுத்ததால், மறு ஏலம் ஆகஸ்ட் 11ம் தேதி நடந்தது. அன்றைய ஏலத்தில், 74 பேர் பங்கேற்றனர். ஏலத்தில் பங்கேற்றவர்கள் யாரும் ஏலத்தொகையை உயர்த்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால், மீன்பிடி உரிமம் அதிகபட்சம், 33 ஆயிரத்துக்கு மட்டுமே ஏலம் போனது.ஆகஸ்ட் 4ம் தேதி அதிகபட்சம் 3.62 லட்சத்துக்கு ஏலம் எடுத்த நிலையில், மறு ஏலத்தில் வெறும், 33 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டதால், பஞ்., நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். எனினும், விதிமுறைபடி அவருக்கு குத்தகையை வழங்க முடிவு செய்யப்பட்டது.ஏலம் முடிந்த மூன்று நாட்களுக்குள் கூடுதலாக, 10 சதவீதம் ஏலத்தொகையை உயர்த்தி கேட்டால் மறு ஏலம் நடத்த அதிகாரம் உள்ளது. அதன்படி, மீன் வியாபாரி ஒருவர் 10 சதவீதம் உயர்த்தி கேட்டதால், ஆகஸ்ட் 11ல் நடந்த மறு ஏலமும் தள்ளி போகும் நிலையில் உள்ளது.அடுத்து, சீலிங் டெண்டர் மூலம் குத்தகை தொகை நிர்ணயிக்க பஞ்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


