திருச்செந்தூர் ஆவணித்திருவிழா துவக்கம்
திருச்செந்தூர் ஆவணித்திருவிழா துவக்கம்
திருச்செந்தூர் ஆவணித்திருவிழா துவக்கம்
ADDED : ஆக 18, 2011 04:23 PM
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா நாளை (ஆக.
19) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, கோயில்நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. மற்ற காலங்கள் தொடர்கின்றன. அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் கோயில் வளாக கொடிமரத்தில், ஆவணித்திருவிழா துவக்க கொடியேற்றப்படுகிறது. மொத்தம் 12 நாள் திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜை, சுவாமி - அம்பாள் சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10ம் நாளான ஆக., 28ம் தேதி காலை நடக்கிறது. அன்று சுவாமி குமரவிடங்கப்பெருமான், அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலை சேருவார். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள் செய்துள்ளனர்.