ADDED : ஆக 15, 2011 01:33 AM
சிவகிரி : வாசுதேவநல்லூர் அருகே மரத்தில் கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.செங்கோட்டை மந்திரம் தெருவை சேர்ந்தவர் முத்தையா முதலியார் மகன் சிவா (39).
இவர் தனது சொந்த வேலைக்காக நேற்று முன்தினம் செங்கோட்டையிலிருந்து தனது காரில் மதுரைக்கு சென்றுள்ளார். நேற்று காலை மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். உள்ளார் அருகே கார் வரும்போது ஒத்தடைக்கடை பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுப்பதற்காக சாலையின் இடதுபுறமாக காரை திருப்பியுள்ளார்.இதில் எதிர்பாராதவிதமாக கார் ரோட்டின் ஓரமிருந்த மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த சிவா படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இச்சம்பவம் குறித்து வாசு., போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


