/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் குறைப்பு: வேலை நேரம் அதிகரிப்புபள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் குறைப்பு: வேலை நேரம் அதிகரிப்பு
பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் குறைப்பு: வேலை நேரம் அதிகரிப்பு
பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் குறைப்பு: வேலை நேரம் அதிகரிப்பு
பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் குறைப்பு: வேலை நேரம் அதிகரிப்பு
ADDED : செப் 15, 2011 09:18 PM
சிவகங்கை : தமிழக பள்ளிகளில் தேர்வு விடுமுறை நாட்களை குறைத்தும்,பள்ளி வேலை நேரத்தை 35 நிமிடம் அதிகரித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகம் வழங்குவதில், இக் கல்விஆண்டு துவக்கத்தில் காலதாமதம் ஏற்பட்டது. கல்வி ஆண்டு துவங்கி 2 மாதத்திற்கு பின் தான், புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. பள்ளிகளில் செப்.,22ல் துவங்க உள்ள காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தை குறைத்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 25 சதவீதமும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீத பாடத்திட்டத்தில் இருந்து தேர்வு நடைபெறும் என அறிவித்தது.
குறைப்பு:தமிழகத்தில் செப்.,22ல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. இத்தேர்வு முடிவுக்கு பின் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், 10 நாட்கள் காலாண்டு தேர்வுக்கு விடுமுறை வழங்கப்படும். இக்கல்வியாண்டில் சமச்சீர் பாட புத்தகத்தால் ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில், விடுமுறை நாட்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வு விடுமுறை அக்., 2 முதல் 6 வரை என 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன. அதிகரிப்பு: பள்ளி வேலைநாட்களை ஈடுசெய்யும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும், வேலை நேரம் 35 நிமிடம் அதிகரித்துள்ளது. பள்ளிகள் மாலை 4.15 க்கு பதில் 4.50 வரை செயல்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.