ADDED : செப் 21, 2011 07:31 AM
சென்னை : கவர்னராக ரோசய்யா பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, நாளை ஊட்டிக்கு வருகிறார்.
இன்று மாலை, சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை வருகிறார். நாளை, கோவையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், மாலை கோவையிலிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். ஊட்டி ராஜ்பவனில் தங்கும் கவர்னர், 23ம் தேதி, தொட்டபெட்டா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்காவை பார்வையிடுகிறார். பின், 24ம் தேதி முதுமலை செல்கிறார். முதுமலை புலிகள் காப்பகத்தை கண்டுரசிக்கும் கவர்னர், அப்பர் கார்குடி ஓய்வு விடுதியில் ஓய்வு எடுத்த பின், ஊட்டிக்கு திரும்பி அன்று மாலை கோவைக்கு திரும்புகிறார்.