/உள்ளூர் செய்திகள்/மதுரை/மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்
மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்
மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்
மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்
ADDED : ஆக 22, 2011 02:33 AM
மதுரை, : மதுரையில் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்த வழக்கில் கைதான
தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி,52 வீட்டில், பத்து
ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
வழக்கில் அவரது தங்கை கணவர் நடராஜனையும்
போலீசார் கைது செய்தனர். ஒத்தக்கடை புதுத்தாமரைப் பட்டியில் முருகனுக்கு
சொந்தமான ஒரு ஏக்கர் 84 சென்ட் நிலம் உள்ளது. இதை போலி ஆவணங்கள் தயாரித்து
விற்று மோசடி செய்ததாக மின்னல்கொடி, பத்திர எழுத்தர் விஜயகுமார், உடந்தையாக
இருந்த பொட்டுக்காரன் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர். இதைதொடர்ந்து, நேற்று முன் தினம் இரவு ஆரப்பாளையத்தில் உள்ள
மின்னல்கொடி வீட்டில் போலீசார் சோதனை யிட்டனர். ஒருமணி நேரம் நடந்த
இச்சோதனையில், மோசடி தொடர்பாக 10 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில்,
மோசடிக்கு உடந்தையாக இருந்த மின்னல் கொடியின் தங்கை கணவர் நடராஜனையும்
போலீசார் கைது செய்தனர். கைதான நான்கு பேரும் நேற்று சிறையில்
அடைக்கப்பட்டனர்