/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அணைகளில் 12 ஆயிரம் மி.க.அடி நீர் தட்டுப்பாடு 90 ஆயிரம் எக்டேரில் பயிர்கள் சாகுபடி பாதிப்புஅணைகளில் 12 ஆயிரம் மி.க.அடி நீர் தட்டுப்பாடு 90 ஆயிரம் எக்டேரில் பயிர்கள் சாகுபடி பாதிப்பு
அணைகளில் 12 ஆயிரம் மி.க.அடி நீர் தட்டுப்பாடு 90 ஆயிரம் எக்டேரில் பயிர்கள் சாகுபடி பாதிப்பு
அணைகளில் 12 ஆயிரம் மி.க.அடி நீர் தட்டுப்பாடு 90 ஆயிரம் எக்டேரில் பயிர்கள் சாகுபடி பாதிப்பு
அணைகளில் 12 ஆயிரம் மி.க.அடி நீர் தட்டுப்பாடு 90 ஆயிரம் எக்டேரில் பயிர்கள் சாகுபடி பாதிப்பு
ADDED : செப் 17, 2011 02:50 AM
திருநெல்வேலி : நெல்லை மாவட்ட அணைக் கட்டுகளில் 12 ஆயிரம் மி.க.டி நீர் தட்டுப்பாடு நிலவுவதால் 90 ஆயிரம் எக்டேரில் பயிர்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் வரையிலான இயல்பான மழை அளவு 329 மி.மீ ஆகும்.
இதுவரை மாவட்டத்தில் 299.15 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 9 சதவீதம் குறைவானதாகும்.அணைகளில் நீர்:>மாவட்டத்தில் அணைக் கட்டுகளில் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 765 மி.க.அடியாகும். ஆனால் தற்போது 1,603 மி.க.டி நீர் மட்டுமே உள்ளது. இதனால் அணைகளில் 12 ஆயிரம் மி.க.அடி நீர் குறைவாக காணப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 1,914 மி.க.அடி நீர் இருந்தது. தற்போது அணையில் 12 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 14 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.வறண்ட குளங்கள்:>மொத்தம் 2,449 குளங்களில் 2,308 குளங்கள் முற்றிலும் வறண்டுள்ளது. 141 குளங்களில் ஒரு மாதத்திற்கு மட்டும் தண்ணீர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிணறுகளில் சராசரியாக 1 முதல் 4 மணி நேரம் பாசனம் மேற்கொள்ளும் அளவிற்கு நீர் உள்ளது.90 ஆயிரம் எக்டேர் பாதிப்பு:மாவட்டத்தில் 2011-12ம் ஆண்டில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 459 எக்டேர் பரப்பில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 27 ஆயிரத்து 940 எக்டேர் பரப்பில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 90 ஆயிரம் எக்டேரில் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் 25 ஆயிரத்து 441 எக்டேரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.நெல் உற்பத்தி பாதிப்பு:
கோடை, கார், பிசான பருவங்களில் மொத்தம் 92 ஆயிரம் எக்டேர் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததில் 16 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் சுமார் 76 ஆயிரம் எக்டேர் இச்சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.நன்செய் தரிசு பயறு வகைகள் 1,958 எக்டேர், சிறு தானியங்கள் 2,202 எக்டேர், பருத்தி 1,789 எக்டேர், எண்ணெய் வித்து பயிர்கள் 1,687 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2011-12ம் ஆண்டில் 50 ஆயிரம் எக்டேரில் திருந்திய நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 6,891 எக்டேர் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பொட்டாஷ், டி.ஏ.பி உர தட்டுப்பாடு தொடர்பாக இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் இந்த உரங்களை மட்டும் சார்ந்திராமல் இதர காம்பளக்ஸ் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.