என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்: பிரதமர் மன்மோகன் சிங் கருத்து
என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்: பிரதமர் மன்மோகன் சிங் கருத்து
என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்: பிரதமர் மன்மோகன் சிங் கருத்து
ADDED : செப் 27, 2011 11:52 PM

புதுடில்லி : 'மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐ.நா., பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின், நேற்று டில்லி திரும்பும் வழியில், விமானத்தில் நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியின் விவரம்:என்னுடைய அமைச்சரவைக்குள், எந்த பிணக்கும் இல்லை.
சிதம்பரம் குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எனக்கு அனுப்பிய கடிதத்தைப் பார்த்தேன். சில விஷயங்களை மேம்படுத்துவது குறித்து, அவர் அளித்துள்ள கருத்து தான் அந்த கடிதத்தில் இருந்தது.
தற்போது, இந்த விஷயம் கோர்ட்டில் உள்ளதால், அதைப் பற்றிய கருத்தை வெளிப்படையாக கூற முடியாது. எதிர்க் கட்சியினர் இடைத்தேர்தலை சந்திக்க அவசரப்படுகின்றனர். நாங்கள் ஐந்தாண்டு கால ஆட்சியை முழுமையாக முடிப்போம். எனவே, எதிர்க் கட்சியினர் இரண்டரை ஆண்டு காலம் பொறுமை காக்க வேண்டும்.இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.