/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பெண் போலீசிடம் தகராறு ராணுவ வீரர்கள் கைதுபெண் போலீசிடம் தகராறு ராணுவ வீரர்கள் கைது
பெண் போலீசிடம் தகராறு ராணுவ வீரர்கள் கைது
பெண் போலீசிடம் தகராறு ராணுவ வீரர்கள் கைது
பெண் போலீசிடம் தகராறு ராணுவ வீரர்கள் கைது
ADDED : செப் 16, 2011 11:15 PM
முதுகுளத்தூர் : பெண் போலீஸ்காரரை கீழே தள்ளிவிட்டு, பணி செய்ய விடாமல் தடுத்த இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி கலவர சம்பவத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் - ராமநாதபுரம் செல்லும், காத்தாகுளம் செக்போஸ்டில், நேற்று சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராணுவத்தில் பணியாற்றி விடுப்பில் வந்துள்ள, கீழமானாங்கரையை சேர்ந்த ஜெயகாந்தி, 28. தேரிருவேலி அலெக்ஸ்பாண்டியன், 27. சென்னை நகர ஆயுதப்படை போலீசாக பணியாற்றும், கீழமானாங்கரையை சேர்ந்த செந்தில் முருகன், 26 ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த மதுரை ஆறாவது பட்டாலியன் பிரிவை சேர்ந்த சரண்யா, மணிமுத்தாறு 9வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த பால்ராஜ் தடுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்து, சரண்யாவை கீழே தள்ளி விட்டு, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போலீசார் சரண்யா, பால்ராஜ் புகாரின் பேரில், முதுகுளத்தூர் போலீசார், ராணுவவீரர் உட்பட மூன்றுபேரையும் கைது செய்தனர்.