1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
ADDED : ஜூலை 31, 2024 07:35 AM

சிவகங்கை : 'தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்கக்கூடாது' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
முதல்வரிடம் கட்சியும், அரசுத் துறைகளும் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் அவர் உடனடியாக பதவி விலகுவதுதான் தமிழகத்துக்கு நல்லது. எல்லா குற்றங்களுக்கும் பின்னணி போதைப் பொருட்கள் பயன்பாடு தான்.
சென்னையில் வெள்ளநீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய் செலவு செய்த கணக்கை, தமிழக அரசு வழங்காத வரை தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்காது; வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.