/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு : டிராக்டர் சுமை கட்டணம் அதிகரிப்புடீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு : டிராக்டர் சுமை கட்டணம் அதிகரிப்பு
டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு : டிராக்டர் சுமை கட்டணம் அதிகரிப்பு
டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு : டிராக்டர் சுமை கட்டணம் அதிகரிப்பு
டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு : டிராக்டர் சுமை கட்டணம் அதிகரிப்பு
ADDED : ஜூலை 24, 2011 09:31 PM
ராஜபாளையம் : டீசல் மற்றும் டயர் விலை உயர்வால், டிராக்டர் சுமை கட்டணத்தில் 100 ரூபாய் உயர்த்த டிராக்டர் உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
ராஜபாளையத்தில் டிராக்டர் உரிமையாளர் சங்க கூட்டம் தலைவர் ராக்கப்பன் தலைமையில் நேற்று நடந்தது. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பேசுகையில், 'டீசல், டயர் மற்றும் டிராக்டர் உதிரிபாகங்கள் விலை உயர்ந்து உள்ளது. டிராக்டர் பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளது. டிராக்டரில் கொண்டு செல்லும் கட்டுமான பொருள்களின் தற்போதைய கட்டணத்தில் இருந்து 100 ரூபாய் உயர்த்த வேண்டும்,' என்றனர். இதற்கான தீர்மானமும் நிறைவேறியது. அதன்படி, தற்போதைய கட்டணங்களான உடைகல் ஒன்றிற்கு கட்டணம் ஏழு என்பது 12 ரூபாயாக உயர்கிறது, 600 ரூபாயாக இருக்கும் செங்கல் ஒரு லோடுக்கான கட்டணம் 700 ஆகவும், 1800 ரூபாயாக உள்ள மிஷின் மெட்டல்கல் லோடு 1900 ஆகவும் உயர்கிறது. கட்டண உயர்வு மக்களுக்கு தெரியப்படுத்த ஜூலை 27ல் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.