ஆக., 14ல் ஓசூரில் மாரத்தான் போட்டி
ஆக., 14ல் ஓசூரில் மாரத்தான் போட்டி
ஆக., 14ல் ஓசூரில் மாரத்தான் போட்டி
ADDED : ஆக 11, 2011 02:35 AM
ஓசூர் : ஓசூர் வெங்கடேஷ்வரா ஹவுசிங் காலனி ராயல் வெல்பிட் கெல்த் கிளப் சார்பில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வம், உடல்நலம் மற்றும் சுதந்திர தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மராத்தான் போட்டிகள் வரும் 14ம் தேதி நடக்கிறது.
போட்டிகள் நான்கு பிரிவாக நடக்கிறது. அனைத்து வயது ஆண்கள் கலந்து கொள்ளும் 14 கி.மீ., தூரம் போட்டி, அனைத்து வயது பெண்கள் கலந்து கொள்ளும் 10 கி.மீ., தூரம் போட்டி, பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் 6 கி.மீ., போட்டி, பள்ளி மாணவிகள் கலந்து கொள்ளும் 6 கி.மீ., போட்டி ஆகியவை நடக்கிறது. அனைத்து பிரிவு போட்டிகளிலும் முதல் இடத்தை பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசு 2,000 ரூபாய், மூன்றாம் பரிசு 1,000 ரூபாயும், ஆறுதல் பரிசு 35 பேருக்கு தலா 500 ரூபாயும் வழங்கப்படுகிறது. அனைத்து ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் மராத்தான் போட்டி ஓசூர் ஜான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி முன் இருந்து ராமநாயக்கன் ஏரி, ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ தங்கம் மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை ரிங்ரோடு, சிஷ்யா பள்ளி வழியாக மீண்டும் ராமநாயக்கன் ஏரி வழியாக போட்டி துவங்கிய ஜான் போஸ்கோ பள்ளி முன் முடிவடைகிறது. பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கான மராத்தான் போட்டிகள் ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி முன் இருந்து ராமநாயக்கன் ஏரி, ஏ.எஸ்.டி.சி., சாலை தங்கம் மருத்துவமனை, சிஷ்யா பள்ளி வழியாக ஜான்போஸ்கோ பள்ளி முன் முடிவடைகிறது. போட்டியில் பங்கேற்க அனுமதி கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. மராத்தான் போட்டிகள் முடிந்தபின், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.