மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ :கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை தவிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ :கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை தவிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ :கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை தவிப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல், வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
வன உயிரின காப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கல்லுப்பட்டி, சாப்டூர் பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர், நேற்று காலையில் இருந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ பிடித்த பகுதி அருகே தண்ணீர் வசதி இல்லை, மேலும், வனத்துறையினர் தீ தடுப்பு கருவிகள் கொண்டு செல்லாததால், மரக்கிளைகளை வெட்டி, தீயை அணைக்க முயற்சி செய்கின்றனர். வேகமாக வீசும் காற்றினால், பரவும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, மான், வரையாடு, சாம்பல் நிற அணில்கள், ராஜநாகம் உள்ளன. தொடரும் காட்டுத்தீயால் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.