Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பட்ஜெட்டில் வரி விலக்கு: அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை

பட்ஜெட்டில் வரி விலக்கு: அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை

பட்ஜெட்டில் வரி விலக்கு: அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை

பட்ஜெட்டில் வரி விலக்கு: அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை

ADDED : ஆக 01, 2011 11:13 PM


Google News
Latest Tamil News

சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், வரிகளை விலக்க வேண்டுமென, அரசுக்கு வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.

நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், வணிக வரித்துறை அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடந்த கூட்டத்தில், 157 வணிகர்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க மூத்த தலைவர் ரத்தினவேல், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் அசோசியேஷன் பொதுச் செயலர் பாலச்சந்திரன், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் வி.பி.மணி, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு பை உற்பத்தியாளர்கள் நல சங்கத் தலைவர் மொய்தீன் உட்பட 400 பேர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். 'உணவு எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வாட் வரியை ரத்து செய்ய வேண்டும். புண்ணாக்கிற்கு 1 சதவீத வரி மட்டும் விதிக்க வேண்டும். வாட் வரிக்கு உட்படும் வணிகர்கள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும். விற்பனை ரசீதுகளில், வாட் வரியை உட்படுத்துவதில் பிரச்னை இருப்பதால், பொருட்களின் விலையிலேயே சேர்க்க அனுமதிக்க வேண்டும். அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் பொருட்களின் ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு தொழில் வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.



'சி' பாரம் இல்லாதவர்களுக்கும், உள்ளீட்டு வரியை திருப்பித் தர உத்தரவிட வேண்டுமென, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் அசோசியேஷன் கோரிக்கை விடுத்தது. 'மெல்லும் புகையிலை பொருட்களைத் தவிர, மற்ற காம்பு புகையிலை பொருட்களான பீடி, சுருட்டு போன்றவற்றிற்கும் வரியை குறைக்க வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து குறைந்த வரி செலுத்தி, கள்ள மார்க்கெட்டில் வாங்கும் புகையிலை பொருட்களை, சோதனைச் சாவடிகளில் தடுக்க வேண்டும். வாட் வரி பதிவு முறையை, வருமான வரித்துறை போன்று எளிதாக்க வேண்டும். சிறு வணிகர்களுக்கு, மின்சார மானியத்தை, 100 யூனிட்டிலிருந்து 300 யூனிட்டாக உயர்த்த வேண்டும்' என, தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது.



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மனுவில், 'வணிகர்களை பாதிக்கும் வகையில், அதிக அபராதம் விதிக்கும் தொழிலாளர் நலன் மற்றும் எடை அளவு சட்ட விதிகளை மாற்ற வேண்டும். கோல மாவு, குழந்தைகளுக்கான பொம்மைகள், சைக்கிள், ரெடிமேட் ஆடைகள், மாணவர் சீருடைகள் மீது வரி விலக்கு அளிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பைகளுக்கு வரி விலக்கு அளிக்குமாறு, பை உற்பத்தியாளர்கள் நல சங்கம் வலியுறுத்தியது. வணிகர்களின் கருத்துக்களை பரிசீலித்து, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us