/உள்ளூர் செய்திகள்/வேலூர்/காட்டு யானைகள் அட்டகாசம் 50 ஏக்கர் பயிர்கள் நாசம்காட்டு யானைகள் அட்டகாசம் 50 ஏக்கர் பயிர்கள் நாசம்
காட்டு யானைகள் அட்டகாசம் 50 ஏக்கர் பயிர்கள் நாசம்
காட்டு யானைகள் அட்டகாசம் 50 ஏக்கர் பயிர்கள் நாசம்
காட்டு யானைகள் அட்டகாசம் 50 ஏக்கர் பயிர்கள் நாசம்
ADDED : ஆக 05, 2011 12:37 AM
வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே ஆந்திரா மாநிலத்தையொட்டி கவுண்டனியா யானைகள் சரணாலயம் உள்ளது.
இங்குள்ள யானைகள் அடிக்கடி தமிழக கிராமப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இரு நாட்களாக நான்கு காட்டு யானைகள் குடியாத்தம் ஒட்டியுள்ள சைன குண்டா, கோட்டமிட்டா கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணா (22), பாபு (33) ஆகியோர் மாந்தோப்புக்குள் புகுந்து அங்கிருந்த மா மரங்களை சேதப்படுத்தியது. நேற்று முன்தினம் அங்கிருந்து சென்ற யானைகள் வாணியம்பாடி அருகே காவலூர், ஜமனாமரத்தூர் பகுதிகளுக்கு சென்று நெல் பயிர்களை நாசம் செய்து வருகின்றது. 'யானைகள் அட்டகாசத்தால், 50 ஏக்கர் நெற் பயிர்கள், 10 ஏக்கர் மா தோப்புக்கள் நாசமடைந்ததாகவும், யானைகளை கட்டுப்படுத்த வேண்டும்' என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ., வீரமணி, வாணியம்பாடி எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஆகியோர் நேற்று யானைகள் பாதித்த பகுதிகளுக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி அரசின் கவனத்துக்கு இப் பிரச்னையை எடுத்துச் செல்வதாக உறுதியளித்தனர்.