இலவச மிக்சி, கிரைண்டர்: 13 சதவீதம் ஒதுக்கீடு
இலவச மிக்சி, கிரைண்டர்: 13 சதவீதம் ஒதுக்கீடு
இலவச மிக்சி, கிரைண்டர்: 13 சதவீதம் ஒதுக்கீடு
ADDED : செப் 06, 2011 11:44 PM
திண்டுக்கல்: மாவட்டங்களின் மொத்த தேவையில் 13 சதவீத இலவச மிக்சி, கிரைண்டர், பேன் மட்டுமே வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது.
செப்., 15 ல், இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கப்பட உள்ளது. ஒரு வாரத்திற்குள் இப்பொருட்கள் சென்னையில் இருந்து வந்துவிடும். தாலுகா அலுவலகம், சமுதாய கூடங்களில் இவை இருப்பு வைக்கப்படும். தாலுகா வாரியாக, மக்கள் தொகை குறைவாக உள்ள ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, ரேஷன் அரிசி பெற தகுதியானவர்களுக்கு இவை வழங்கப்படும். முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மொத்தம் தேவையில் 13 சதவீத இலவச பொருட்கள் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்திற்கு 78 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.