ADDED : செப் 01, 2011 04:33 PM
புதுடில்லி : ஜூலை மாதத்தில் உலக காபி ஏற்றுமதி 10.36 சதவீதம் சரிவடைந்துள்ளது.
60 கிலோ எடை கொண்ட பைகள் சுமார் 7.35 மில்லியன் அளவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச காபி கழகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2011 செப்டம்பர் வரையிலான 10 மாதங்களில் காபி ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து 28,080 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.