/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் நகர மன்ற தேர்தலில்14 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடுவிழுப்புரம் நகர மன்ற தேர்தலில்14 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
விழுப்புரம் நகர மன்ற தேர்தலில்14 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
விழுப்புரம் நகர மன்ற தேர்தலில்14 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
விழுப்புரம் நகர மன்ற தேர்தலில்14 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
ADDED : செப் 21, 2011 09:48 PM
விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சியில் பழைய வார்டுகள் மாற்றப்பட்டு புதிய
வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 42 வார்டுகளில் 14 வார்டுகள்
பெண்களுக்கு ஒதுக்கீடு செ#யப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சியில் கடந்த
தேர்தல் வரை 36 வார்டுகள் இருந்தது. தற்போது நகராட்சி பகுதிகளை விரிவாக்கம்
செய்யும் வகையில் வழுதரெட்டி, சாலாமேடு, காகுப்பம், எருமணந்தாங்கல்
மற்றும் பாணாம்பட்டு ஆகிய 5 ஊராட்சிகள் விழுப்புரம் நகராட்சியுடன்
இணைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
மேலும் பழைய வார்டுகள் அனைத்தும் தற்போது மறு சீரமைப்பில் புதிய
வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் புதிதாக நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள வழுதரெட்டி 1 மற்றும் 27வது
வார்டிலும், சாலாமேடு 26, 28, 29வது வார்டுகளிலும், காகுப்பம் 36வது
வார்டிலும், எருமணம்தாங்கல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 38வது வார்டிலும்,
பாணாம்பட்டு 41 மற்றும் 42வது வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 14, 27, 42வது வார்டுகள் எஸ்.சி., பொதுவிற்கும், 15, 30வது
வார்டுகள் எஸ்.சி., பெண்களுக்கும், 8, 9, 10, 20, 22, 31, 32, 36, 38, 39,
40, 41 ஆகிய வார்டுகள் பெண்களுக்கும் மற்ற வார்டுகள் பொதுவானதாகவும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.