/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கிராம உதவியாளர்கள் பொதுக்குழு கூட்டம்கிராம உதவியாளர்கள் பொதுக்குழு கூட்டம்
கிராம உதவியாளர்கள் பொதுக்குழு கூட்டம்
கிராம உதவியாளர்கள் பொதுக்குழு கூட்டம்
கிராம உதவியாளர்கள் பொதுக்குழு கூட்டம்
ADDED : ஆக 11, 2011 02:54 AM
தஞ்சாவூர்: தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரகாசன், பிரசார செயலாளர் நடராஜன், அமைப்பு செயலாளர் தங்க. நடராஜன் ஆகியார் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பழனி, மாநில பொது செயலாளர் ஆதிமூலம், பொருளாளர் மதனகோபால், செயலாளர்கள் காண்டீபன், முத்துராமு, ஜெயராமன், பெரியசாமி, குணசேகரன், துணை தலைவர்கள் ராமசாமி, பாலசுந்தரம், தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர். 'டி' பிரிவு ஊதியம் மற்றும் பதவி உயர்வு, மாவட்ட வட்ட ஓய்வு பெற்ற நிர்வாகிகளையும், புதிய நிர்வாகிகளையும், பாராட்டுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.