Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/"பாலிவுட்' சினிமாவை பார்த்து "தம்' அடிக்க பழகும் இளைஞர்கள்

"பாலிவுட்' சினிமாவை பார்த்து "தம்' அடிக்க பழகும் இளைஞர்கள்

"பாலிவுட்' சினிமாவை பார்த்து "தம்' அடிக்க பழகும் இளைஞர்கள்

"பாலிவுட்' சினிமாவை பார்த்து "தம்' அடிக்க பழகும் இளைஞர்கள்

ADDED : ஜூலை 13, 2011 12:04 AM


Google News
Latest Tamil News

புதுடில்லி : பாலிவுட் திரைப்படங்களில் வரும், புகைப்பிடித்தல், புகையிலை போடுதல் போன்ற காட்சிகளால், இளைஞர்கள், அந்தப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு விடுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

டில்லியில் 2009ல்,12 பள்ளிகளைச் சேர்ந்த 12ல் இருந்து 16 வயதுக்குட்பட்ட 3,956 மாணவர்களிடம் புகையிலைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் அதன் தாக்கம் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், பாலிவுட் திரைப்படங்களில் வரும் சிகரெட், பீடி, புகையிலை, சிகர், பைப் ஆகியவற்றை ஏதாவது ஒரு கதாபாத்திரம் பயன்படுத்துதல் மற்றும் புகையிலை தொடர்பான கடைகள் வரும் காட்சிகள் ஆகியவை மாணவர்களிடம் காண்பிக்கப்பட்டன.



மொத்தம் 59 படங்களில் இருந்து, 162 காட்சிகள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டன. இந்த ஆய்வில், புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டுக் காட்சிகள் வரும்போது அவற்றால், மாணவர்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது தெரியவந்தது. அவர்களிலும் மாணவியரை விட மாணவர்கள் தான் அதிகளவில் புகையிலைப் பொருட்கள் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர் என்பதும் தெரியவந்தது.



மொத்த மாணவர் தொகையில், 7.3 சதவீதம் பேர் புகையிலைப் பழக்கத்தின் மீதான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களில், காட்சிகள் மற்றும் புகையிலைப் பயன்பாடு இரண்டுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நடத்தப்பட்ட, முதல் ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us