/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மரங்களை வெட்டுவது குற்றம் வனத்துறை கடும் எச்சரிக்கைமரங்களை வெட்டுவது குற்றம் வனத்துறை கடும் எச்சரிக்கை
மரங்களை வெட்டுவது குற்றம் வனத்துறை கடும் எச்சரிக்கை
மரங்களை வெட்டுவது குற்றம் வனத்துறை கடும் எச்சரிக்கை
மரங்களை வெட்டுவது குற்றம் வனத்துறை கடும் எச்சரிக்கை
ADDED : செப் 13, 2011 12:59 AM
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் தேர்தல் துறை அலுவலகம் எதி ரில் பூவரசன் மரத்தை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.
ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் தேர்தல் துறை அலுவலகம் அருகில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலான பூவரசன் மரம் இருந்தது. இந்த மரத்தை கடந்த சில நாட்களுக்கு முன் யாரோ மர்ம நபர்கள் சிலர் வெட்டியுள்ளனர். வெட்டிய மரத்தின் பகுதியை துண்டு துண்டாக்கி எடுத்து சென்றுள்ளனர். சாலை ஓரத்தில் உள்ள மரத்தை வனத்துறை அனுமதி பெறாமல் இரவு நேரங்களில் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். வெட்டப்பட்ட மரத்தின் ஒரு பகுதியை இது வரை எடுத்து செல்லாமல் உள் ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்ட தனி நப ருக்கு வனத்துறை அனுமதி கொடுக்காது. சம்பந்தப்பட்ட துறையினர் கேட்டால் அனுமதி கொடுக்கப்படும். பொது இடத்தில் உள்ள மரங்களை தனியார் வெட்டினால் அது சட்டப்படி குற்றம். அப்படி யாராவது மரங்களை வெட்டினால் 2204808 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார். அனுமதி பெறாமல் தனி நபர்கள் மரங்களை வெட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.