2ஜி விவகாரம்: பிரதமருக்கு பிரணாப் கடிதம்
2ஜி விவகாரம்: பிரதமருக்கு பிரணாப் கடிதம்
2ஜி விவகாரம்: பிரதமருக்கு பிரணாப் கடிதம்
ADDED : செப் 28, 2011 05:31 PM
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிதியமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
அந்த கடிதத்தில் ஸ்பெக்டரம் முறைகேட்டை அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என கூறப்பட்டது. இந்த கடிதத்தால் டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் பவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், 2ஜி விவகாரம் தொடர்பாக எழுதப்பட்ட கடிதம் குறித்து விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிதியமைச்சகம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் பல அமைச்சகங்களின் குறிப்பு இடம்பெற்றுள்ளதாக பிரணாப் தனது கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.