Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கால்நடைகளின் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி: கலெக்டர்

கால்நடைகளின் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி: கலெக்டர்

கால்நடைகளின் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி: கலெக்டர்

கால்நடைகளின் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி: கலெக்டர்

ADDED : ஆக 01, 2011 03:50 AM


Google News
நாமக்கல்: 'கால்நடைகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதை, கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ளலாம்' என, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளை தீவிர சிகிச்சைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையால் ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது.இந்த வசதி தேவைப்படுவோர், 04286-266491 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, கால்நடை மருத்துவமனைக்கும், தங்கள் இடத்துக்கும் போகவர ஆகும் தூரத்துக்கான உரிய கட்டணத்தை (தற்போதைய கட்டணம் கி.மீ.,க்கு எட்டு ரூபாய்) செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us