Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலீஸ் காவல்: மூவரிடம் தீவிர விசாரணை

போலீஸ் காவல்: மூவரிடம் தீவிர விசாரணை

போலீஸ் காவல்: மூவரிடம் தீவிர விசாரணை

போலீஸ் காவல்: மூவரிடம் தீவிர விசாரணை

ADDED : செப் 18, 2011 01:12 AM


Google News

சேலம்: சேலம் கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரேம்நாத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்ற, மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகம் உள்பட, 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு, 2 நாளும், வக்கீல் தெய்வநாயகத்துக்கு, 15 மணி நேரமும், பிரகாசுக்கு, 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, மாஜிஸ்திரேட் வித்யா நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மாநகர் நில அபகரிப்பு மீட்புக்குழுவில் வைத்து, மூவரிடமும் தனித்தனியே உதவி கமிஷனர் நாராயணன் தலைமையில் விசாரணை நடந்தது. மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. 15 மணி நேர விசாரணைக்கு பின், நேற்றிரவு வக்கீல் தெய்வநாயகம், மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து, 2 நாள் விசாரணை இன்று மாலை முடிந்ததும், பாரப்பட்டி சுரேஷ்குமார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுகிறார். நாளையோடு, 3 நாள் விசாரணை முடித்து பிரகாஷ் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us