/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தி.மு.க., கவுன்சிலர், தந்தை மீது தாக்குதல்: மூவர் அதிரடி கைதுதி.மு.க., கவுன்சிலர், தந்தை மீது தாக்குதல்: மூவர் அதிரடி கைது
தி.மு.க., கவுன்சிலர், தந்தை மீது தாக்குதல்: மூவர் அதிரடி கைது
தி.மு.க., கவுன்சிலர், தந்தை மீது தாக்குதல்: மூவர் அதிரடி கைது
தி.மு.க., கவுன்சிலர், தந்தை மீது தாக்குதல்: மூவர் அதிரடி கைது
ADDED : ஆக 13, 2011 01:01 AM
நாமக்கல்: கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக, தி.மு.க., கவுன்சிலர்
மற்றும் அவரது தந்தையை, காங்கிரஸ் கவுன்சிலர் மகன் தாக்கிய வழக்கில், மூவரை
போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் நகராட்சி,
14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சந்திரசேகர். அவருக்கும், 16வது வார்டு
காங்கிரஸ் கவுன்சிலர் பேபிவசந்தி மகன் ஸ்ரீதர் என்பவருக்கும் இடையே பணம்
கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை நிலவி வந்துள்ளது.நேற்று முன்தினம்
இருவருக்கும் இடையே தகராறு ஏற்படடுள்ளது.
அப்போது, சந்திரசேகர் தரப்பினர்,
ஸ்ரீதர் தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்றிரவு
ஸ்ரீதர், தனது கூட்டாளிகளுடன் சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது
ஏற்பட்ட தகராறின் போது, சந்திரசேகர் பாட்டிலால் தாக்கப்பட்டுள்ளார்.
குறுக்கிட்ட சந்திரசேகர் தந்தை கருப்பையாவுக்கு (65) பாட்டிலில் குத்து
விழுந்துள்ளது.அதில் படுகாயமடைந்த கருப்பையா, சேலம் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும்
அளித்த புகாரின் பேரில், தனபால் (32), ரமேஷ் (35), பார் குமார் ஆகிய
மூவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


