ADDED : செப் 01, 2011 01:32 AM
புதுச்சேரி : கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை தலைமையாசிரியர் செல்வம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பல் மருத்துவர் ராமசுப்ரமணியன், செவிலியர் ருக்குமணி ஆகியோர் பற்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கி செயல்விளக்கம் அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சேகர், பாபு செய்திருந்தனர்.