அர்ஜென்டினாவில் பஸ் மீது ரயில் மோதி விபத்து: 11 பேர் பலி
அர்ஜென்டினாவில் பஸ் மீது ரயில் மோதி விபத்து: 11 பேர் பலி
அர்ஜென்டினாவில் பஸ் மீது ரயில் மோதி விபத்து: 11 பேர் பலி
UPDATED : செப் 14, 2011 09:34 AM
ADDED : செப் 14, 2011 09:20 AM
பியூனஸ்ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் ரயில்வே கிராஸிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து ஒன்று ரயில்மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர்பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அர்ஜென்டினாவில் தலைநகர் பியூனஸ்ஏர்ஸ் நகரில் உள்ள ஒரு ரயில்வே கிராஸிங் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது.
அப்போது குறுக்கே அதிகவேகத்தில் வந்த ரயில் பஸ் மீது பயங்கரமாக மோதியதில் 11 பேர் பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தினால் பேருந்திற்கு பின்னால் தொடர்ந்து வந்த சில வாகனங்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 20 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அர்ஜென்டினாவின் அவசர மருத்துவசேவை மையம் தெரிவித்துள்ளது.