/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பு பொதுகுழாய்களை நம்பியுள்ள மக்கள் அவதிகரூரில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பு பொதுகுழாய்களை நம்பியுள்ள மக்கள் அவதி
கரூரில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பு பொதுகுழாய்களை நம்பியுள்ள மக்கள் அவதி
கரூரில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பு பொதுகுழாய்களை நம்பியுள்ள மக்கள் அவதி
கரூரில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பு பொதுகுழாய்களை நம்பியுள்ள மக்கள் அவதி
ADDED : ஜூலை 29, 2011 11:29 PM
கரூர்: கரூர் நகராட்சியில் சில வார்டுகளில் மின்மோட்டர் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதனால் பொது குழாயில் தண்ணீர் சரிவர சப்ளை இல்லாததால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.கரூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பல வார்டுகளில் முறையாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சில வார்டுக்குக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்படுத்துவதற்காக நகராட்சி மூலம் மின்மோட்டாருட ன் ஆழ்குழாய் போடப்பட்டு சி ன்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வரும் நாள ன்று பெரும்பாலான வீட்டுக்காரர்கள் மின்மோட்டாரை பொருத் தி தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் குடிநீர் இணைப்பு இல்லாமல், பொது குழாய்களை நம்பியுள்ள மக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பது இல்லை.'குடிநீர் வரி, சொத்துவரி, வீட்டுவரி போன்ற அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும்' என்று கூறி வாடகைக்கு வாகனத்தை எடுத்து அறிவிப்பு செய்யும் கரூர் நகராட்சி நிர்வாகம் பகுதி மக்களுக்கு சரியான முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என கண்காணிப்பது இல்லை.மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்கப்படும் வியாபார நிறுவனங்கள் உள்ள பகுதியில் பணிபுரியும் நகராட்சி அலுவலர்களுக்கு, 'பலமான கவனிப்பு' கிடைப்பதால், அவர்கள் எதையும் கண்டுகொள்வது இல்லை. கரூர் நகராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீருக்கு, ஆண்டுக்கு 1,000 ரூபாய் குடிநீர் வரி செலுத்தப்படுகிறது. ஆனால், பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீட் டு இணைப்புகளுக்கு முறையான குடிநீர் வருவதில்லை. மேலும், குறைந்த அழுத்த குடிநீர் மட்டும் வருகிறது.இதனால் சில பகுதிகளில் குடிநீருக்காக பெரும் சிரமம் ஏற்படுகிறது. பெரும்பாலான பகுதிகளுக்கு இரவு 9 மணிக்கு மேல் தான் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை. சிலநேரங்களில் தண்ணீர் வீணாக கீழே செல்கிறது. இதனால் குடிநீர் பிடிக்க முடியாமல் ஆழ்குழாயில் வரும் உப்பு நீரை பயன்படுத்தம் நிலை உள்ளது.
எனவே, பொதுக்குழாய்களை நம்பி தண்ணீர் பிடிக்கும் மக்கள் வசதிக்காக மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.