அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்; உதவி மேலாளர் சஸ்பெண்ட்
அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்; உதவி மேலாளர் சஸ்பெண்ட்
அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்; உதவி மேலாளர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை ஆரப்பாளையம் அருகே அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பான நிலையில், அச்செயலை செய்த உதவி மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்ஸை டிரைவர் ஓட்டி வந்தார். நேற்று ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பஸ்ஸை நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தார். பின்னர், ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு சென்ற பஸ்ஸை வெகுநேரமாகியும் எடுக்காததால், டிரைவரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, உதவி மேலாளர் சொன்னால் தான் பஸ்ஸை எடுப்பேன் என்று டிரைவர் கூறியுள்ளார். இதனால், பயணிகள் ஆரப்பாளையம் பஸ் நிறுத்த உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் சென்று பஸ்ஸை எடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் குழம்பிப் போன அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன்பிறகு, டிரைவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தனக்கு எதிராக பயணிகளை தூண்டி விடுகிறாராயா? என்று கூறி, செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே,இந்த சம்பவத்தை கண்டித்த பா.ம.க., தலைவர் அன்புமணி, டிரைவரை தாக்கிய உதவி மேலாளரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் கடமை நிர்வாகம் செய்வது தான், கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று கூறி உள்ளார்.