ADDED : அக் 02, 2011 01:50 AM
திருப்பூர் : மாநகராட்சி தேர்தலில் 'சீட்' தராததால் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருப்பூர் மாநகராட்சி 46வது வார்டு அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தேவராஜ்; மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலருக்கு போட்டியிட கட்சி தலைமை, அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.
தனக்கு 'சீட்' தராததை கண்டித்து, தன் ஆதரவாளர்களுடன் கடந்த 29ம் தேதி காலை, காங்கயம் கிராஸ் ரோடு, சிக்னல் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டார்; போக்குவரத்து பாதித்தது.இதுகுறித்து வி.ஏ.ஓ., முத்துசாமி புகார் அளித்தார்; தெற்கு போலீசார், ஐ.பி.சி., 143 (சட்ட விரோதமாக கூடுதல்) 188 (பொது மக்களுக்கு இடையூறு) ஆகிய பிரிவுகளின் கீழ், முன்னாள் கவுன்சிலர் தேவராஜ் மற்றும் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


