சோலையார் பவர்ஹவுஸ் 1 மீண்டும் இயக்கம்
சோலையார் பவர்ஹவுஸ் 1 மீண்டும் இயக்கம்
சோலையார் பவர்ஹவுஸ் 1 மீண்டும் இயக்கம்
ADDED : ஜூலை 20, 2011 08:32 PM
வால்பாறை: வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை சூடுபிடித்துள்ள நிலையில், சோலையார் பவர் ஹவுஸ் 1 இன்று முதல் இயக்கப்படுகிறது.
வால்பாறையில் பருவ மழை தீவிரமாக பெய்துவரும் நிலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, கெஜமுடி, நடுமலை ஆறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 139.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 142.13 அடியாக உயர்ந்தது. தொடர் மழையின் காரணமாக சோலையாறு பவர் ஹவுஸ் 1 (மானாம்பள்ளி பவர்ஹவுஸ்) மீண்டும் இன்று முதல் இயக்கப்பட்டதை தொடர்ந்து விநாடிக்கு 398 கன அடி தண்ணீர் மானாம்பள்ளி வழியாக பரம்பிக்குளத்திற்கு வெளியேற்றப்படுகிறது. வால்பாறையில் அதிகபட்சமாக மேல்நீராறு அணையில் 30 மில்லி மீட்டர் மழை பதிவானது.