Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கடந்த ஆட்சியில் இலவசத்தால் தி.மு.க.,வினர்பயனடைந்தனர்: விழாவில் அமைச்சர் பேச்சு

கடந்த ஆட்சியில் இலவசத்தால் தி.மு.க.,வினர்பயனடைந்தனர்: விழாவில் அமைச்சர் பேச்சு

கடந்த ஆட்சியில் இலவசத்தால் தி.மு.க.,வினர்பயனடைந்தனர்: விழாவில் அமைச்சர் பேச்சு

கடந்த ஆட்சியில் இலவசத்தால் தி.மு.க.,வினர்பயனடைந்தனர்: விழாவில் அமைச்சர் பேச்சு

ADDED : செப் 17, 2011 03:21 AM


Google News
ஆத்தூர்: ''தி.மு.க., ஆட்சியில் கொடுத்த இலவச பொருட்களால், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் பயனடைந்தனர்,'' என, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.ஆத்தூர் அருகே ஓலப்பாடி மற்றும் கோவிந்தம்பாளையம் பஞ்சாயத்துகளில், அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மற்றும் ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கி, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் கொடுத்த இலவச பொருட்களால், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் பயனடைந்தனர். அடுத்தவர்கள் சொத்தை அபகரித்துச் செல்வதற்கு தான், தி.மு.க., வினர் உள்ளனர். இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், கறவைமாடு, ஆடுகள், மாணவ, மாணவியருக்கு லேப்டாப் ஆகியவற்றை அறிவித்து, நேற்று முன்தினம் தமிழக முதல்வர் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கினார்.கடந்த ஆட்சியில், 100 ரூபாய் முதல், 400 ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு தான், இலவச 'டிவி' கொடுத்தனர். நலத்திட்டங்கள் வழங்க லஞ்சம் வாங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த ஆட்சியில், குடும்பத்தில் ஒருவருக்கும் மட்டும், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான, 650 நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 1.50 லட்சம் ரூபாய் வரை, 900 நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு பேசினார்.ஓலப்பாடியில், 218 பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், தலைவாசல் கோவிந்தம்பாளையத்தில், 64 பேருக்கு நான்கு ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது.விழாவில், மாவட்ட கலெக்டர் மகரபூசணம், எம்.எல்.ஏ.,க்கள் மாதேஸ்வரன், பெருமாள், வெங்காடஜலம், செல்வராஜ், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பாலசுப்ரமணியம், தனித்துணை கலெக்டர் சரோஜா, ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வராஜீ உள்ளிட்ட கட்சியினர், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us