Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"குழந்தைக்கு பாக்கெட் பால் கொடுக்காதீர்'

"குழந்தைக்கு பாக்கெட் பால் கொடுக்காதீர்'

"குழந்தைக்கு பாக்கெட் பால் கொடுக்காதீர்'

"குழந்தைக்கு பாக்கெட் பால் கொடுக்காதீர்'

ADDED : ஆக 05, 2011 12:46 AM


Google News
திருப்பூர் : ''குழந்தைகளுக்கு அவசியம் தாய்ப்பால் தர வேண்டும்; பாக்கெட் பால் கொடுக்காதீர்,'' என மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் கேட்டுக் கொண்டார்.உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தாய்ப்பால் வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, செவிலியர் பயிற்சி பள்ளி சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மருத்துவத்துறை இணை இயக்குனர் திருமலைச்சாமி தலைமை வகித்தார்.

அவர் பேசுகையில், ''குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க, தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்,'' என்றார்.தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் பேசுகையில், ''குழந்தைகளுக்கு ஆரோக்கியம், சத்து இரண்டும் தரக்கூடியது தாய்ப்பால். வைட்டமின், ரத்தத்தின் அளவை அதிகப்படுத்தும் ஹீமோகுளோபின் அளவு தாய்ப்பாலில் அதிகம் இருக்கிறது; தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை, குழந்தை பெற்ற ஒவ்வொரு தாய்மார்களிடத்திலும் அறிவுறுத்த வேண்டும். திருப்பூரில் பணிபுரியும் பெண்களில் பலர், அவசரத்துக்கு குழந்தைக்கு பாக்கெட் பால் கொடுக்கின்றனர். பாக்கெட் பால் குழந்தைக்கு வேண்டவே வேண்டாம்,'' என்றார்.சுகாதார மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், குழந்தை நல மருத்துவர் பிரியா விசுவாசம், பயிற்சி செவிலியர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us