Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/70 கைதிகள் ஓட்டளிக்க தயார்

70 கைதிகள் ஓட்டளிக்க தயார்

70 கைதிகள் ஓட்டளிக்க தயார்

70 கைதிகள் ஓட்டளிக்க தயார்

ADDED : அக் 06, 2011 03:55 AM


Google News

மதுரை:மதுரை மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், 500க்கும் மேற்பட்ட 'ரிமாண்ட்' கைதிகள் உள்ளனர்.

இவர்களில் 70 பேர் தேசிய பாதுகாப்பு சட்டம், உணவுப்பொருட்கள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் குண்டர் சட்டத்தில் உள்ளனர். இவர்கள் ஓராண்டு வரை ஜாமீனில் வெளிவரமுடியாது என்பதால், தபால் மூலம் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களை தவிர மற்ற 'ரிமாண்ட்' கைதிகள் ஜாமீனில் செல்லலாம் என்பதால், அவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. கலெக்டர் சகாயத்திற்கு 70 கைதிகளின் முழு விபரங்களும் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும்பட்சத்தில் ஓட்டு அளிப்பார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் 52 கைதிகள் ஓட்டளித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us